இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி தமிழக மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விசாரித்த நீதிபதிகளின் தீர்ப்பில், மருத்துவ கவுன்சிலின் விதிப்படியே நடக்கும் என்று தீர்ப்பளித்தது. பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவர்கள் 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவசரமில்லாத அறுவை சிகிச்சை, முகாம்கள், வகுப்பு எடுத்தல் ஆகியவற்றில் ஈடுபடமாட்டோம் என மருத்துவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.