fbpx
Connect with us

Cinemapettai

பாகுபலி 2- கர்நாடகாவில் வாங்க ஆளில்லை…?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலி 2- கர்நாடகாவில் வாங்க ஆளில்லை…?

இந்தியத் திரையுலகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பாகுபலி 2 இப்படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதுவரை இந்தியப் படங்கள் வெளியிடப்படாத நாடுகளில் கூட படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இருந்தாலும் இந்தியாவிற்குள் கர்நாடக மாநிலத்தில் இப்படம் வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக விலையை நிர்ணயம் செய்துள்ளார்களாம். சுமார் 40 கோடி ரூபாய் கர்நாடக உரிமை என்று சொல்லப்பட்ட நிலையில் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம். மேலும், சத்யராஜ் இப்படத்தில் நடித்திருப்பதால் கன்னட அமைப்புகள் வேறு படத்தை வெளியிடக் கூடாது என மிரட்டல் விடுத்து வருகிறார்களாம். தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க சத்யராஜும் மன்னிப்புக் கேட்கத் தயாராகிவிட்டார் என்கிறார்கள்.

அதற்குள் 40 கோடி ரூபாய் விலை கொடுத்து யாரும் வாங்க முன் வரவில்லை என்றால் தயாரிப்பாளர்களே அங்கு படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்துவிடுவார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top