இப்போ இருக்க வளரும் நடிகர்கள் எல்லார் கூடயும் நடிச்சு தொம்சம் பண்ணிட்டு இருக்குற நடிகைதாங்க நம்ம கன்னடத்து கரும்பு நிக்கி கல்ராணி.தன்னுடைய பதினோரு வயதிலேயே மலையாள திரைப்படத்தில் அறிமுகமான இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்கள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் எந்த மொழித் திரைப்படத்தில் நடித்தாலும் டப்பிங் இல்லாமல் தன் சொந்தக் குரலிலேயே பேசுகிறார்.அதுபற்றி அவரிடம் கேட்டபோது “எனக்கு தாய் மொழி கன்னடம், எனக்கு கன்னடமும், ஆங்கிலமும் அத்துபடி… ஆனால் இதை மட்டும் வைத்துக்கொண்டு பல மொழித் திரைப்படங்களை கையாளுவது சிரமம் என்று எனக்குத் தெரிந்தது… அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளை கற்றுக் கொண்டேன்.

எந்த மொழித் திரைப்படத்திலும் நானே எனக்கு டப்பிங் பேசுவதால் என்னுடைய நடிப்பிற்கேற்ற உடல் மொழியையும், பின்னணி குரலையும் என்னால் இணைக்க முடிகிறது… இது கட்டாயம் ஒவ்வொரு நடிகைகளும் அவசியம் செய்ய வேண்டிய விஷயம்.

நான் ஒரு வாயாடி, என்னுடன் யாரும் வாய் கொடுக்க முடியாது.. பேச ஆரம்பித்தால் நிப்பாட்டவே மாட்டேன், அது எந்த மொழியானாலும் சரி…கீ, ஹரஹர மகாதேவகி, பக்கா போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன், அடுத்து நான் நடித்து வெளிவரப்போகும் படம் நெருப்புடா.

எனக்கு எப்படியும் குறைந்தது பன்னிரண்டு மொழிகளாவது முழுமையாக பேசக்கற்றுகொள்ளவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் கற்றுக்கொள்வேன்” என்றார்.தமிழ் நடிகைகளில் லட்சுமிக்கு பிறகு நிக்கியே அதிக மொழிகள் பேசுபவராம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: உங்ககிட்ட வாய் கொடுக்க நாங்க எப்பவும் ரெடி 🙂 !!!