தற்போது நடிகைகள் பலரும் அவர்களுக்கு சினிமா துறையில் நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் பற்றி பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

அந்த வரிசையில் பூ, மரியான், பாங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகை பார்வதி தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பகிர்ந்துள்ளார்.

Parvathyநான் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் எனது தாய் மொழியான மலையாளத்தில் வெறும் நான்கு படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். அதற்கு காரணம் திரையுலகில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஏஜெண்டுகள் என்று ஒரு பெரும் கூட்டமே படுத்தால்தான் வாய்ப்பு தருவேன் என்று வற்புறுத்துகிறார்கள்.

என்னை பல முறை இவ்வாறு தொந்தரவு செய்துள்ளனர். வாய்ப்பிற்காக படுப்பதற்கு எனக்கு இஷ்டமில்லை. சினிமாவை தவிர வேறு வேலை இல்லையா இந்த உலகத்தில் நாம் செய்வதற்கு. அப்படி படுத்து பசியாற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.

என்னை போன்று பல நடிகைகளுக்கு இந்த தொல்லை தொடர்ந்து வருகிறது. எந்த நடிகையும் உங்கள் வாய்ப்பிற்காக உங்கள் மானத்தை இழந்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.