dhanush gautham menon enpt

தனுஷும், கவுதமும் ரசிகர்களை செமையா குழப்பி கொண்டு இருக்கிறார்கள். தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. இதில்தான் இசையமைப்பாளர் பெயரே இல்லை.

பொதுவாக இப்படி டீசரோ, முதல் லுக்கோ வரும்போது அப்படத்தின் டெக்னீஷியன்களின் பெயரை வெளியிடுவது வழக்கம். எல்லாருடைய பெயரையும் வெளியிட்டாக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை. ஆனால் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்ற முக்கியமானவர்களின் பெயர் வந்தே ஆக வேண்டும். ஆனால் இந்த டீசரில் இசையமைப்பாளர் பெயர் மிஸ்சிங்.

விசாரித்தால், செம காமெடி பண்ணுகிறார்கள் தனுஷ் தரப்பில். “இன்னும் எங்க சாருக்கே (தனுஷ்) யார் மியூசிக் டைரக்டர்னு சொல்லல. ஏ.ஆர்.ரஹ்மான்னு அவர் நினைச்சுகிட்டு இருக்கார்” என்றார்கள். என்னது? ஹீரோவுக்கே சொல்லலையா? இப்படியெல்லாம் விளக்கம் கொடுத்தா நாங்க நம்பணுமா? என்று ஆடிப் போயிருக்கிறது பிரஸ். விளக்க வேண்டிய கவுதம், சைலன்ட் மோடில் இருக்கிறார்.