திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

கைவிரித்த ஹீரோக்களால் முத்தையா எடுத்த முடிவு.. இது எங்க போய் முடிய போகுதோ

பிரபல நடிகர்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் இனிமேல் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிறது.

சினிமாவில் யார் எப்போது வேண்டுமானாலும் ஹீரோவாக மாற முடியும். எந்தப் படங்களில் எந்த கேரக்டர் ரோலில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் இதற்கு மக்கள் ஏற்றுக் கொண்டால் நடிகர்களாக அவர்கள் தொடர்ந்து பயணிக்க முடியும். அவர்கள் நடிக்கும் படங்களும் வெற்றி பெறும்.

அந்தவகையில், சினிமாவில் இயக்குனர்களாக இருந்து ஹீரோவானவர்கள் என்று பார்த்தால், எஸ்.ஜே.சூர்யா, சேரன், சசிகுமார், சமுத்திரகனி, அமீர், சேத்தன், ஆகியோர் இந்த லிஸ்டில் உள்ளனர். இங்கு ஹீரோக்களுக்கு பஞ்சமில்லை என்றாலும் கதையின் தேவை கருதி, இயக்குனர்கள், இசையமைப்பாளர்களும் கூட ஹீரோவாக நடிக்கின்றனர். ரசிகர்கள் அவர்களை அங்கீகரித்தால் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், குட்டிப்புலி, மருது, விருமன் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது படங்கள் அனைத்தும் கிராமத்தை அடிப்படையாக கொண்டு கதை, திரைக்கதை, ஆக்சன் காட்சிகள் இடம்பெறும். அதேசமயம் சில படங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஒரு ஃப்ளாப் படத்தால் கைவிரித்த நடிகர்கள்

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் என்ற படம் தியேட்டரில் வெளியாகி தோல்வியடைந்தது. இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தோல்வியால் இவர் அடுத்த படத்திற்கு கதை ரெடி பண்ணி, பிரபல ஹீரோக்களை அணுகியபோது யாரும் இவருக்கு வாய்ப்பு தரவில்லை என தகவல் வெளியாகிறது.

தற்போது தனது மகனை வைத்து சுள்ளான் சேது என்ற படத்தை முத்தையா இயக்கி வரும் நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து தானே தயாரித்து இயக்கும் புதிய படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அவர் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார் எனவும், இப்படம் முன்னணி நடிகர்களுக்குப் போட்டியாக இவர் எடுத்து, வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தபோது, இவரை மொய்த்த நடிகர்கள், ஒரு தோல்விப் படம் கொடுத்தபின், இவரை கண்டுகொள்ளவில்லையே என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News