Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனிமேல் கவர்ச்சி இல்லை- முன்னணி நடிகை திடீர் முடிவு
தெலுங்கு உட்பட தற்போது அநீதி கதைகள், விஜய்-61, இரும்புத்திரை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகின்றார் சமந்தா.
அஞ்சான் படத்தில் கவர்ச்சியில் வந்த சமந்தா, அதை எல்லாம் நிறுத்தி விட்டு தற்போது நடிப்புக்கு முன்னுரிமை கொடுக்க முடிவெடுத்துள்ளாராம்.
அந்த வகையில் தற்போது மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இரும்புத்திரை படத்தில் ரோபோ சங்கருடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் காமெடி நன்றாக உள்ளது என பலர் கூறவே தற்போது கவர்ச்சிக்கு நோ கூறிவிட்டு, இனிமேல் தான் நடிக்கும் படங்களில் காமெடிக்கும் ஓரளவு முன்னுரிமை கொடுக்கப்போவதாக கூறியுள்ளாராம் சமந்தா.
