வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பலரை வாட்டி வதைக்கும் சர்க்கரை நோயே இனிமேல் இருக்காது? பிரபலம் பகிர்ந்த தரமான டயட்

நீரிழிவு நோய் இன்று பரவலாகிவிட்ட நிலையில் சர்க்கரை நோய் இனிமேல் இருக்காது என்று பிரபலம் ஒருவர் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய உலகில் சிறியோர் முதல் பெரியோர் வரை சர்க்கரை நோய் என்பது பரவலாவிட்டது. இதற்கெல்லாம், உணவு, வேலைப்பளு, போதிய உறக்கமின்மை உள்ளிட்டவரை காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் நிலையாகும். நமது உடலில் உள்ள கணையம் இன்சுலின் போதிய இன்சுலின் சுரக்காத அல்லது இன்சுலியின் சுரந்தும் அது வேலை செய்யாத நிலை என்று கூறப்படுகிறது.

இந்த இன்சுலின் என்பது ஹார்மோன் ஆகும் இது ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் நிலையில், இது உயிரணுக்களுக்குள் நுழைய அனுமதிப்பதால், உடலுக்குப் போதிய ஆற்றலாக அவை பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் போதிய இன்சுலினை கணையம் சுரக்காத போது சர்க்கரை நோய் உருவாகிறது. நீழிரிவு நோய் நிலையில், ரத்தத்தில் குளுக்கோஸின் செறிவும் அதிகரிக்கிறது.

ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயல்பாடு குறைவது, உடல் எடையை கட்டுக்குள் வைக்காமல் இருப்பது, போதைப்பழக்கம் இவையெல்லாம் சர்க்கரை நோய் உருவாவதற்கான காரணங்களாகக் கூறப்படும் நிலையில் இது நாள்பட்ட நோயாகவும் கருதப்படுகிறது. நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதிக தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மங்கலான பார்வை, சோர்வாக உணர்வது, எடை குறைவு இவையெல்லாம் அறிகுறிகளாகும்.

இந்த நோய் ஏற்பட்டால் போக போக, இதயம், கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகளில் உள்ள ரத்த நாளங்களைச் சேதப்படுத்தும், நரம்பு பாதிப்பு, மோசமான ரத்த ஓட்டத்தினால் கால்களிலும் பிரச்சனை ஏற்பட்டு, கால்களில் புண்ணாகி விரைவில் காலை எடுக்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயே இனி இருக்காது

இப்படி உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த சர்க்கரை நோயே இனி இருக்காது என்று மை ஹெல்த் ஸ்கூல் நிறுவனர் பிரபாகர் ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ”டோஸ்ட் என்ற ஹார்மோன் சந்தோசமாக, சிரித்துக் கொண்டே இருந்தால், குடும்பத்துடன் நேரம் செலவழித்தால் சாரிட்டி ஆக்டிவேட் ஆகும். அதாவது விலை கொடுத்து வாங்க முடியாத மருந்தை நமது உடலே உற்பத்தி செய்யும்.

அப்பாவுக்கு சர்க்கரை நோய் என்றால் அவர் சாப்பிட்ட அதே தலைமுறை உணவை நாமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். 95% சக்கரை நோய் ஜெனிடிக்ஸ் கிடையாது. டயட் செஞ்சஸ், அது உணவு மற்றும் லைஃப் ஸ்டைல். லேபில் பிளட் டெஸ்ட் செய்தால் அதுல ரிபோர்ட் வரும், நியூட்ரிசனிஸ்ட், டயட்டீசனை போய் பாருங்கள் அவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, உங்களுக்கு என்ன டயட் உணவு செட்டாகும் என்று கூறுவர்.

நோய் வந்தால்தான் டாக்டரிடம் செல்ல வேண்டும் என்பதில்லை, வருடம் ஒருமுறை அல்லது 2 ஆண்டிற்கு ஒருமுறை பிளட் சாம்பிள் எடுத்து பரிசோதனை செய்து, சரியான டயட் உணவு எடுத்துக் கொண்டால் நோயிலிருந்து விடுபடலாம் என்று தெரிவித்துள்ளார்.



- Advertisement -

Trending News