புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நா எவ்ளோ சாதிச்சாலும், அது தமிழ் மண்ணுக்கே! புஷ்பா-2 வசூலுக்கு பலமா அஸ்திவாரம் போட்ட அல்லு அர்ஜுன்

நான் சினிமாவில் எவ்வளவு சாதிச்சாலும் எதை தமிழ் மண்ணுக்கே சமர்ப்பிப்பேன் என்று அல்லு அர்ஜூன் கூறியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் ஸ்டைலிஸ் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் அத்தனை பாடல்களும் ஹிட்டு, படமும் சூப்பர் ஹிட்டாகி, வசூலும் வாரிக் குவித்தது. எனவே சூட்டோடு சூடாக புஷ்பா தி ரூல் என்ற பெயரில் இப்படத்தின் 2 ஆம் பாகத்தின் கிளிம்ஸ் வெளியிட்டு, பூஜையோடு ஆரம்பித்து மொத்த படத்தையும் முடித்துவிட்டனர்.

இப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி டிரெண்டிங்கில் இடம்பிடித்து, குறுகிய நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. இந்த டிரெயிலர் 12 கோடிக்கும் அதிகமான வியூஸை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா ஒரு பிராண்டாகவே மாறியுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் கூட பீகாரில் நடந்தபோது லட்சக்கணக்கான ரசிகர்கள் அதில் பங்கேற்று அலறவிட்டனர். எனவே இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை 11 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

புஷ்பா பட புரமோசனில் அல்லு அர்ஜூன் பேசியதாவது:

இப்படத்தின் 2 வது பாடல் கிஸ்ஸிக் என்ற பாடல் நேற்று வெளியானது. இதில் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இப்படத்தின் புரமோசன் பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று, செனை தாம்பரத்தில் படக்குழு வந்திருந்தனர். அப்போது அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, நெல்சன் திலீப்குமார், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன், “நான் பிறந்த இந்த மண்ணுக்கு அன்பான வணக்கம். என் தமிழ் மக்களே, சென்னை மக்களே, இந்த நாளை என்னால் மறக்க முடியாது. புஷ்பா புரமோசனுக்காக வெளி நாடு சென்றிருந்தாலும் சென்னை வரும் உணர்வே வேறு. சென்னையில் இருந்துதான் நான் தொழில் தொடங்கினேன். என் 20 வருட வாழ்க்கையை நான் சென்னையில்தான் வாழ்ந்தேன். நான் எவ்வளவு சாதித்தாலும், அதை என் ஆணி வேராக இருக்கும் தமிழ் மண்ணுக்கே சமர்ப்பிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் தமிழ் நாடு மீதும் மக்கள் மீது பேரன்பு கொண்டிருக்கும் அல்லு அர்ஜூன் பேச்சுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து, புஷ்பாவை திரையில் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

- Advertisement -

Trending News