ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

எவ்வளவோ முட்டுக் கொடுத்தாலும் குணசேகரன் இல்லாமல் தடுமாறும் எதிர்நீச்சல்.. அப்பத்தாவால் பலிகாடாகும் சக்தி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கதையையும் மாற்றி விறுவிறுப்பாக கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கதை நன்றாக இருந்தாலும் முன்னாடி மாதிரி இந்த நாடகத்தை பார்ப்பதற்கு பெருசாக விருப்பம் வர மாட்டிங்குது.

அதற்குக் காரணம் குணசேகரனின் எதார்த்தமான நடிப்பும் நக்கல் நையாண்டி ஆன காமெடியும் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது என்று பலரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திருவிழாவில் நடக்கப் போகும் சம்பவத்தை வைத்து தான் இந்த நாடகத்தை பழைய மாதிரி கொண்டு வர முடியும் என்று அப்பத்தவை வைத்து கடைசியாக ஒரு அஸ்திவாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

அதாவது பல மாதங்களாக அப்பத்தாவின் 40% சொத்தின் விவகாரத்தை வைத்து குணசேகரன் ரொம்பவே அடங்கிப் போய் இருந்தார். அந்த வகையில் தற்போது அப்பத்தா இந்த 40% சொத்தை ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுத்தப் போகிறார். அதே நேரத்தில் கதிர் இதில் பெரிய சம்பவத்தை ஏற்படுத்தி குணசேகரன் அண்ணன் ஆசைப்பட்ட மாதிரி ஜீவானந்தத்திற்கும் அப்பத்தாவிற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சுற்றுகிறார்.

அதே மாதிரி ஜீவானந்தமும் குணசேகரன் மற்றும் கதிருக்கு ஒரு நல்ல பாடத்தை புகுத்த வேண்டும் என்று அப்பத்தா கூப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கு போகிறார். இதற்கிடையில் கௌதம் அந்த திருவிழாவிற்கு யாருக்கும் தெரியாமல் வந்து ஒரு சம்பவம் செய்யப் போகிறார். அதில் கண்டிப்பாக குணசேகரன் அல்லது கதிர் உயிருக்கு ஆபத்தாக முடிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் ஈஸ்வரி, ஜீவானந்தம் தன்னை பற்றி தவறாக புரிந்து கொண்டார் என்று மிகவும் மன வேதனையில் அழுகிறார். அத்துடன் நம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை எந்த காரணத்தை கொண்டும் ஏமாற்றக்கூடாது அது அவர்களுக்கு செய்யும் பெரிய நம்பிக்கை துரோகமாக இருக்கும் என்று சொல்கிறார்.

இதனை தொடர்ந்து சக்தி தற்போது வெத்துவேட்டாக சுற்றிக்கொண்டு வருவதால் அங்கு இருப்பவர்கள் அவரை ஒரு ஏளனமாக பார்த்து பேசுகிறார்கள். அத்துடன் திருவிழாவில் நடக்கும் சம்பவத்தில் சக்திக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அப்பத்தா ஏற்பாடு பண்ணுன அந்த நிகழ்ச்சியில் சக்தி பலிகடாக மாறப் போகிறார். இப்படி பல திருப்பங்களை கொண்டு வந்து நாடகத்தை விறுவிறுப்பாக ஆக்கினாலும் குணசேகரன் இல்லாததால் தற்போது தட்டு தடுமாறி வருகிறது.

- Advertisement -spot_img

Trending News