Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதல் காட்சிகள் வேண்டாம்… கண்டிஷன் போட்டுவிட்ட தல!
அஜித்தின் முந்தைய இரண்டு படங்களை இயக்கிய சிவா இப்போது மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார். முந்தைய இரண்டு படங்களும் தல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால் இந்த வாய்ப்பு அவருக்குப் போயிருக்கிறது.
அந்த இரண்டு படங்களிலுமே ஹீரோவின் ரொமாண்டிக் போர்ஷன் இருந்தது. ஆனால் அதுவும் தேவை இல்லாத சீனாக இருந்தது. எனவே action படங்களில் இனி டூயட் பாடினாலோ லவ் சீன்லாம் வைத்தாலோ செட் ஆகாது என்பதை உணர்ந்து விட்டாராம் அஜித் .
எனவே இந்த படத்தில் அந்த மாதிரியான எந்த போரடிக்கும் விஷயங்களும் இருக்க கூடாது என்று இயக்குநரிடம் கண்டிஷன் போட்டு விட்டாராம். நடிகரின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக்கொண்ட இயக்குநரும் ஹீரோயினுக்கான போர்ஷனை வெகுவாகக் குறைத்து விட்டாராம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
