புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ரஜினி படத்தை அடுத்து கார்த்தி, சூர்யா-லாம் இல்ல.. பிரபல வில்லன் நடிகருடன் கூட்டணி.. லோகேஷின் பிளான்

லோகேஷ் கனகராஜுடன் பிரபல வில்லன் நடிகர் கோகோர்க்க உள்ளதால் சினிமாத்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ். அடுத்து, கார்த்தி நடிப்பில் கைதி என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின்னர், கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனரானார். இப்படத்தை அடுத்து, விஜயுடன் முதன் முதலாக இணைந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இப்படமும் சூப்பர் ஹிட்டான நிலையில், கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை இயக்கினார்.

கமல்ஹாசனின் கேரியரில் இப்படம் முக்கிய படமாக அமைந்த நிலையில், தமிழ் சினிமாவில் அப்போதைய அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்தது. அதன்பின், மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றினார் லோகேஷ். இப்படமும் வசூலில் பெரும் சாதனை படைத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

விஜய், கமலை அடுத்து ரஜினியுடன் கூட்டணி

இந்த நிலையில்,கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமுடன் உள்ளனர். இந்த நிலையில், சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கூலி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, சன் பிக்சர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

கார்த்தி, சூர்யாவுக்கு டிமிக்கி? வில்லன் நடிகருடன் புதிய காம்போ

கூலி படத்தை அடுத்து, கார்த்தி நடிப்பில் கைதி -2 படத்தை இயக்கவுள்ளார். இதையடுத்து, சூர்யாவுடன் இரும்புக் கை மாயாவி, ரோலக்ஸ் ஆகிய படங்களை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் இவை தமிழ் சினிமாவின் பிரமாண்ட பட்ஜெட் மற்றும் அதிரடி ஆக்சன் படங்களாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், லோகேஷின் ஒவ்வொரு படமும் பெரிய எதிர்பார்ப்பையும் வசூலையும் வாரிக் குவித்து வரும் நிலையில், விரைவில் பிரபல மலையாள நடிகரும் வில்லன் மற்றும் எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதன் மூலம் திறமையாக நடித்து ரசிகர்களின் பாராட்டை அள்ளும் பகத் பாசில் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.

அதாவது, பகத் பாசிலிடம் ஒரு நேர்காணல் நடத்தப்பட்ட போது, வீடியோ கால் மூலம் பேசிய லோகேஷ் கனகராஜ், பகத் பாசிலுடன் விரைவில் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவித்தார். லோகேஷ் இப்படி வெளிப்படையாக பேசிய நிலையில், அடுத்து கைதி -2 படமா, இல்லை சூர்யாவின் இரும்புக் கை மாயாவியா, ரோலக்ஸா இல்லை, பகத் பாசிலுடனான படமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Mamannan-Fahadh-Fasil

- Advertisement -

Trending News