Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்-க்கு விழா நடத்த முடியாது! கைவிரித்த சங்கங்கள்

Actor-Vijay-in-IARA-Awards-2018

2014 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் உள்ள ஒரு சங்கம் IARA AWARDS என்ற ஒரு விருது விழாவை நடத்திக் கொண்டு வருகிறது இந்த விழாவில் நம்ம நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறப் போவது விஜய் ரசிகர்களுக்கும்தமிழ்நாட்டுக்கும் பெருமையான விஷயம் தான். ஆனால் இதில்தான் பிரச்சனை உருவாகிறது.

விஜய்க்கு வந்த இந்த விருதினை வைத்து விஜய் ரசிகர்கள் ஒரு பெரிய விழா நடத்தலாம் என திட்டமிட்டனர் ஆனால் இதற்கு விஜய் ஒத்துக் கொள்வாரா என்பது சந்தேகம்தான் அதனால் நடிகர் சங்க தேர்தலை நடத்தி இருக்கலாமே என்று ஒரு புதிய செய்தியை கிளப்பிவிட்டார்கள் இதற்கு நடிகர் சங்கம் ஒத்துக் கொள்ளுமா?

கோடம்பாக்கத்தில் கண்டிப்பாக நடத்த முடியாது என்று கூறுகின்றனர். ஏனென்றால் விஷால் பதவிக்கு வந்த பின்னர் விஜய் ஒரு விஷயத்திலும் நடிகர் சங்கம் விஷயமாக எதிலும் தலையிடுவதே இல்லை அவர் உண்டு அவர் வேலை உண்டு அவர் ரசிகர் மன்றம் உண்டு என்று இருக்கிறார். மேலும் அவர் தனியாகவே சென்று நல்லது பண்ணி வருகிறார். நடிகர் சங்கத்துக்கு சிறிதும் பயனில்லாமல் இருக்கிறார் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Actor-Vijay-Nominated-for-Best-Actor-in-IARA-Awards-2018

Actor-Vijay-Nominated-for-Best-Actor-in-IARA-Awards-2018

இதற்கு முன் விஜய்க்கு சம்பளம் வரவில்லை என்றால் அல்லது விநியோகஸ்தர்களுக்கு ஏதும் பணம் கொடுக்க வேண்டுமென்றால், சில பிரச்சினைகள் இருந்தால் தீர்த்து வைக்க ராதாரவி சரத்குமார் அவருக்கு உதவி செய்தார்கள். ஆனால் இப்பொழுது அப்படி ஏதும் விஜய்க்கு சிக்கல் இல்லை என்றாலும்,அப்படி ஏதும் படத்தில் பிரச்சினை வந்தால் அவரே தன்னை சமாளித்துக் கொள்ளும் அளவுக்கு பலத்தை அவர் உருவாக்கி வைத்துள்ளார். அதனால் அவருக்கு நடிகர் சங்கம் இனி தேவை கிடையாது நடிகர் சங்கம் உதவி தேவை கிடையாது, மேலும் முக்கிய விஷயமாக புரட்சித் தளபதி விஷால் இளைய தளபதி விஜய்யுடன் போட்டியில் வேறு இருக்கிறார் அதனால் இந்த விழா நடப்பது கண்டிப்பாக நடக்காத விஷயம் என்றே கூறுகின்றனர்.

ஆனால் சில மன்றங்களும் சங்கங்களும் விஜய் மட்டும் ஓகே சொல்லட்டும் தீபாவளி மாதிரி கொண்டாடலாம் என்று கூறுகின்றனர் மேலும் தொலைக்காட்சி நிறுவனங்கள் எஸ் ஏ சந்திரசேகரிடம் பேசிக் கொண்டு வருகிறார்கள். ஒரு விழா நடக்கட்டும் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக தெறிக்க விடுவோம் என்று அவரவர் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கு திட்டம் தீட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top