ஸ்டன்ட் நடிகராக இருந்து வில்லனாக நடித்தவர் மொட்டை ராஜேந்திரன். ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்திற்கு பிறகு காமெடியனாக உருவெடுத்த அவர், தற்போது முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருக்கிறார். சில படங்களின் போஸ்டர்களில் அவரை முன்னிறுத்தியே விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தனக்கு பிறகு மார்க்கெட்டிற்கு வந்த வளர்ந்து வரும் காமெடியன்களை அவர் போட்டியாக நினைப்பதில்லை. தனது படங்களில் அவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்.

குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நடித்தபோது, அதே படத்தில் இன்னொரு காமெடியனாக நடித்த யோகிபாபுவும், மொட்டை ராஜேந்திரனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்களாம். அதனால், பின்னர் தான் நடிக்கும் புதிய படங்களுக்கு இன்னொரு காமெடியன் தேவைப்பட்டால் யோகிபாபுவுக்குத்தான் சிபாரிசு செய்கிறாராம் மொட்டை ராஜேந்திரன். அவரைப்பார்த்து இப்போது தான் நடிக்கும் படங்களுக்கு இன்னொரு காமெடியன் தேவை என்றால் ராஜேந்திரனுக்கு சிபாரிசு செய்கிறாராம்.