fbpx
Connect with us

Cinemapettai

நடிகர்களிடம் நன்கொடை வாங்கி கட்டிடம் கட்ட மறுக்கும் விஷால்- பின்னணி காரணம் இதான் !

News | செய்திகள்

நடிகர்களிடம் நன்கொடை வாங்கி கட்டிடம் கட்ட மறுக்கும் விஷால்- பின்னணி காரணம் இதான் !

ajith-vishalதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, நட்சத்திர கிரிக்கெட்டை நடத்த உள்ளனர்.

ஆனால் அஜித் ,நடிகர்களே தங்களுடைய சொந்தப்பணத்தைப் போட்டு நடிகர் சங்கக்கட்டிடத்தை கட்ட வேண்டும் என்றும் தன் பங்காக 10 லட்சம் தருவதாகவும் அஜித் சொல்லி இருப்பதாக தகவல் வெளியானது.

அஜித்தின் இந்த கருத்து நடிகர் சங்க நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது.

முன்னணி  நடிகர்களின் சொந்தப் பணத்தில் இருந்தே கட்டிடம் கட்ட தேவையான 26 கோடியை புரட்டி நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்ட முடியும். ஆனால் இதை விஷால் உட்பட சங்க நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லையாம்.

காரணம்… முன்னணி நட்சத்திரங்களிடம் பணம் வசூல் செய்து கட்டிடம் கட்டினால், தங்களின் வசதி வாய்ப்பு மற்றும் நிதிநிலைமைக்கு ஏற்றவாறு ஆளுக்கு ஒரு தொகையை கொடுப்பார்கள்.  அப்படி வாங்கும்போது அதிக தொகையை ஒரு நடிகர் கொடுத்துவிட்டு  தன் இமேஜை உயர்த்திக் கொள்வார். மற்றவர்களைவிட நான் பெரிய ஆள் பெரிய வள்ளல் என்று  ஒருவேளை அவர் காட்டிக்கொண்டால் அது மற்ற நடிகர்களின் ஈகோவை பாதிக்கும்.

இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே நன்கொடை வாங்காமல் கிரிக்கெட்போட்டி நடத்தி பணத்தை ஈட்ட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை 7.5 கோடிக்கு முன்னணி சேனலுக்கு விற்றுவிட்டனர். டிக்கெட் கட்டணம், ஸ்பான்ஸர் போன்ற பிற வருவாய் மூலம் 2 கோடியை திரட்ட முடியும் என்றும் நம்பிக்கையில் உள்ளனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top