fbpx
Connect with us

தேவிக்கும், நயன்தாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பிரபுதேவா

prabhudeva devi

தேவிக்கும், நயன்தாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பிரபுதேவா

தமிழ் சினிமாவின் மைகேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபு தேவா. 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், எங்கள் அண்ணா படத்தில் நடித்தார். அதற்கு பின், தற்போது, தேவி படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இனி, அவருடன் பேசுவோம்…25 ஆண்டு சினிமா பயணம் எப்படி இருக்கு?நான் சினிமாவுக்கு வரும்போது, 12 வயது. இப்போது நினைத்து பார்த்தாலும், ஆச்சரியமாகவும், மலைப்பாகவும் இருக்கிறது.

சினிமாவுக்கு வந்த புதிதில், எது தவறு, எது சரி என தெரியாது. இப்போது, ஓரளவு தெரிந்து கொண்டேன். தேவி படத்துக்குள் நீங்கள் வந்தது எப்படி?என்னை எப்போதும், பெரிய ஆளாக நினைத்தது இல்லை. ரொம்ப சாதாரண ஆளாகவே என்னை இப்போதும் நினைக்கிறேன். நல்ல கதைக்காக தமிழில் மீண்டும் நடிக்க காத்திருந்தேன். அப்போது தான், குடும்பத்துடன் பார்த்து, ஜாலியாக ரசிக்க கூடிய தேவி படத்தின் கதை கிடைத்தது. இந்த கதைப்படி, மாடர்ன் பொண்ணுங்க தான் எனக்கு பிடிக்கும். ஆனால், கிராமத்து பெண்ணுடன் திருமணம் ஆகிவிடும். சில நாட்களில் நானே, என்னை மாற்றிக் கொள்வேன்.

இந்த மாற்றம் எனக்குள் எப்படி நிகழ்ந்தது என்பது தான், படத்தின் கதை. நயன்தாராவை பற்றிய கதை தான், இந்த படம் என பேச்சு அடிபடுகிறதே?அப்படி எல்லாம் எதுவுமில்லேங்க. தேவி படத்துக்கும் நயன்தாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.பாலிவுட்டில் வெற்றிகரமான இயக்குனர் நீங்கள்; இந்த படத்தில் இயக்குனர் விஜய்க்கு, ஏதாவது ஐடியா கொடுத்தீர்களா? நடிக்கும் படங்களில் வாயை மூடி வேலை பார்க்க வேண்டும்; எந்த ஐடியாவும் கொடுக்காமல், இயக்குனர் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் என்று தான் நினைப்பேன். ஒவ்வொரு படத்துக்கும் நடிக்க கிளம்பும்போதும், இதை மனதில் வைத்துக் கொள்வேன்.

தமிழில் நிறைய நடிப்பது இல்லையே?தெலுங்கில் படங்களை இயக்க துவங்கி, அப்படியே ஹிந்திக்கு போய் விட்டேன். இதனால், தமிழில் நடிக்க நேரமில்லை. பல மொழிகளில் வேலை பார்க்கும் உங்களுக்கு, எந்த மொழியில் வேலை பார்ப்பது வசதியாக இருக்கு?சினிமாவுக்கு மொழி முக்கியம் இல்லை என நினைக்கிறேன். எல்லா மொழிகளிலும் வேலை பார்த்திருக்கிறேன். எங்கே, நமக்கு வெற்றி கிடைக்குதோ, அங்கே, அதிகமான வசதி கிடைக்கும்.எந்த பாடலின் நடனம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு பாட்டு பிடிக்கும்; அப்புறம், ஏப்ரல் மேயிலே பாட்டு பிடிக்கும். அந்தந்த டிரெண்டிற்கு ஏற்ப, விருப்பங்கள் மாறும்.

உங்க பசங்க என்ன படிக்கிறாங்க ?ஒருத்தர், ஏழாம் வகுப்பு படிக்கிறார்; மற்றவர், நான்காம் வகுப்பு படிக்கிறார். இரண்டு பேருக்குமே, நடனத்தில் ஆர்வம் இல்லை. உங்கள் வீட்டில் உள்ள பசங்க எப்படி இருப்பாங்களோ, அதேபோல் தான், என் பசங்களும் இருப்பாங்க. நயன், ஹன்ஷிகா, சோனாக் ஷி; இதில் யாருடன் உங்களுக்கு அதிக நட்பு?சொன்னா நம்ப மாட்டீங்க; படப்பிடிப்பில் யாருடனும் நெருக்கமாக பழக மாட்டேன். பள்ளியில் படிக்கும்போது, யாருடன் பழகினேனோ, அவர்களுடன் தான், தொடர்ந்து பழகி வருகிறேன். சென்னையில் அதிகம் போகும் இடம்?இப்போது, மும்பையில் தான் அதிக நாட்கள் தங்க வேண்டியுள்ளது.

சென்னைக்கு அவ்வளவாக வருவது இல்லை. வந்தாலும், மெரினா பீச்சுக்கு போவேன்; அவ்ளோதான். டான்ஸ் தவிர?டான்ஸ் தவிர. எனக்கு வேறு எதுவுமே தெரியாது; அதுதான் என் உலகம். நீங்க இப்போ சிங்கிளா?ஆமாம்; தனிமையில் தான் இருக்கேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ, அப்போது சென்னைக்கு வந்து, என் பசங்களுடன் நேரத்தை செலவிடுகிறேன். உங்கள் வாழ்வில் மீண்டும் ஒரு காதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?வரலாம், வராமலும் போகலாம். எனக்கு எப்போதுமே என் பசங்களை பற்றிய நினைப்பு தான் அதிகம் இருக்கும். அவர்களை தவிர, வேறு எதையும் யோசிக்க முடியவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top