Connect with us

Cinemapettai

‘குழந்தைகளுக்கு வேண்டாம்!’ கோலா விளம்பரத்திலேயே அதிர்ச்சி வாசகம்

no coke

‘குழந்தைகளுக்கு வேண்டாம்!’ கோலா விளம்பரத்திலேயே அதிர்ச்சி வாசகம்

பிரியாணி, பீட்சா, சாண்ட்விச் என எந்த உணவாக இருந்தாலும் ‘காம்போ பேக்’ எனும் ஆஃபரில் உடன் ஒட்டிக்கொள்வதில், குளிர்பானங்களுக்கே முதல் இடம். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் வெல்கம் டிரிங்க்காக இடம் பெறுகின்றன, இந்த கோலா பானங்கள். டி.வி, இன்டர்நெட், செய்தித்தாள், ஃப்ளெக்ஸ் பேனர்கள்… என எங்கெங்கும் கோலாகலமாக கோலா மயம். இப்போதேல்லாம், மேல்நாட்டு கலாசாரம் உள்ள உணவகங்களில், எந்த உணவு வாங்கினாலும், அதனுடன் சேர்த்து கோலாவையும் தருகின்றனர். குடிக்க தண்ணீருக்கு பதிலாக கூல்டிரிங்க்ஸ்தான் என மறைமுகமாகச் சொல்கின்றனர்.

no cokeஆக்சிஜனை சுவாசித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை உடல் வெளியிடுகிறது. நம் உடலுக்கே ஆக்சிஜன்தான் தேவை, கார்பன் தேவை இல்லை என்று தெரியும். அப்படி இருக்கையில், நாம் காசு கொடுத்து கார்பனேட்டட் டிரிங்க்ஸை வாங்கி குடிக்க வேண்டுமா..?
‘பழங்களைக் கடி, பழச்சாறுகளைக் குடி’ என்பதுதான் நம் வழக்கம். உடலே வேண்டாம் என வெளியிடும் கார்பனை, புதுப் புது பெட் பாட்டில்களில் அடைத்து விற்றால் மட்டும் ஒப்புக்கொள்ளுமா என்ன? ஒவ்வொரு குளிர்பானத்தின் லேபிளில் பார்த்தாலே தெரியும்… `குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது’, ‘மரபியல் பிரச்னை இருப்பவர்களுக்கு தரக் கூடாது’ எனும் வாசகத்தை சிறிய எழுத்துகளில் அச்சிட்டு இருப்பார்கள். அதை நாம் கவனிக்கத் தவறுகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.

குளிர்பானங்கள் நம்மை எப்படி பாதிக்கும்?

நம் உடலில் இரண்டு நரம்பு மண்டலங்கள் உள்ளன. ஒன்று செயல் நரம்பு மண்டலம், கையை மடக்குவது, காலை நீட்டுவது போன்ற வேலைகளைச் செய்யும். உணர்வு நரம்பு மண்டலம் என்பது தொட்டால் புரிந்துகொள்ளும் தன்மை. இந்த வேலைகளைச் செய்யக்கூடியது நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள். இவை ரத்தம், சருமம், எலும்பு, நகம் என அனைத்து இடங்களிலும் இருக்கும். ஒவ்வொரு செல்லுக்கும் இணைப்பு பாலமும் இதுதான். இது ஒரு புரோட்டீன். குளிர்பானங்கள் குடிப்பதால், இந்த நியுரோட்ரான்ஸ்மிட்டர்கள் பாதிக்கும். அதாவது, ஒரு மாதத்துக்குத் தொடர்ந்து குளிர்பானங்களைக் குடித்தாலே, நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் பாதிக்கப்படுவது நிச்சயம். இதன் உயிர் வேதிப்பொருட்களின் உருவ அமைப்பு மற்றும் வேதிக் கட்டமைப்பு மாறிவிடும். ஒரு சுவரில் நடுவில் உள்ள இரண்டு செங்கற்களை எடுத்துவிட்டால் என்ன நிலையோ அந்த நிலைதான் ஏற்படும். அதாவது உடல் என்கிற சுவர் பொலபொலவென உதிர்ந்துவிடுவது போல உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தொடுதல், உணர்தல் போன்ற திறன்களும் பாதிக்கப்படும்.
நியுரோட்ரான்ஸ்மிட்டரின் வேலை குறைந்தாலோ, அதிகரித்தாலோ பிரச்னைதான். அதிகரித்தால் புற்றுநோய் வரலாம். குறைந்தால், வேறு எதாவது உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். மொத்தத்தில், நோயைத் தருவது நிச்சயம்; விளைவுகளை ஏற்படுத்துவதில் முதலிடம்!

`Contains no fruit. Contains added flavours.’
இது, குளிர்பானத்தில் பழங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. சுவையூட்டிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது.

Aspartame
சுவைக்காக பயன்படுத்தப்படும் கெமிக்கல் இது. அஸ்பார்டிக் ஆசிட் மற்றும் பினைலாலனைன் (aspartic acid and phenylalanine) எனும் இரண்டு அமினோ அமிலங்களால் தயாரிக்கப்படும் இந்த ரசாயனம், சர்க்கரையைவிட 200 மடங்கு அதிக இனிப்புத் தன்மையைக் கொடுக்கும் சக்திபெற்றது.
ஆஸ்பார்டேம்-மின் விளைவுகளைப் பற்றி இரண்டுவிதமான ஆய்வுகள் நடந்தன. ஒன்றில், `ஆஸ்பார்டேம் கெமிக்கலால் மூளையில் கட்டி ஏற்படலாம்’ என்றும், இன்னொரு ஆய்வில் `இதனால்தான் மூளையில் கட்டி ஏற்பட்டதா என உறுதிபடுத்த முடியவில்லை’ என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது புற்றுநோயை உண்டாக்கும் காரணியாகவும் மாற வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது.

Not for phenylketonurics
உலக அளவில் 15,000 பேருக்கு மரபணுக் கோளாறு காரணமாக `பீனைல்கீடொனுரியா’ (Phenylketonuria) எனும் குறைபாடு இருக்கிறது. இவர்களது உடலானது பினைலாலனைன் (phenylalanine) என்ற கெமிக்கலை ஒப்புக்கொள்ளாது. இது தெரியாமல் இவர்கள் இந்த கெமிக்கல் கலந்த உணவுகளை உண்டால், நரம்புகள் பாதிப்பு, மனநல பாதிப்பு, மூளைத் திசுக்கள் பாதிப்படைதல் ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.
`எந்த உணவாக இருந்தாலும், அந்த உணவின் லேபிளில், `Phenylketonurics: Contains phenylalanine’ என்ற வார்த்தைகள் இருந்தால், அந்த உணவைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top