திறமைகள் இருந்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காத பிரபல வீரர்.. மனவருத்தத்தில் கீரன் பொல்லார்ட்

ஐபிஎல் 48வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின, இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

முதலில் களமிறங்கிய ஆர்சிபி 164 ரன்களை எடுத்த நிலையில், அடுத்ததாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்து 19.1 ஓவர்களில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 41 பந்துகளில் 79 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவியவர் சூர்யகுமார் யாதவ்.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கீரன் பொல்லார்ட், அணி சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சூர்யகுமார் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுத் தந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் பல இக்கட்டான சூழ்நிலையில் சூரியகுமார் யாதவ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றவர். அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காததை பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார் கீரன் பொல்லார்ட்.

suryakumar
suryakumar