fbpx
Connect with us

வாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடு பறந்த கார்த்திக் சுப்புராஜ் ?

karthik subburaj

வாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடு பறந்த கார்த்திக் சுப்புராஜ் ?

வெளிநாட்டில் பல லட்சம் சம்பாத்தியத்தில் வேலை பார்த்து வந்த ‘இறைவி’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சினிமா ஆசையில் அந்த வேலையை தூக்கிப்போட்டுவிட்டு கோலிவுட்டுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வெற்றி கண்ட இவர் இயக்கிய குறும்படத்தையே பெரிய படமாக இயக்கும் வாய்ப்பு அமைந்தது.

அப்புறம் pizza படம் எடுத்து வெற்றி கண்டார். அதை தொடர்ந்து ஜிகர்தண்டா படம் இவருக்கு பெரிய பெயர் வாங்கி குடுத்தது.

தனது படங்கள் தொடர் வெற்றியைக் குவித்து வந்ததில் இயக்குனருக்கு தலைகால் புரியவில்லை. தான் வளர்ந்த குறும்படத்தை வளர்த்துவிட நினைத்த இயக்குனர், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற பெயரில் கையை சுட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இவர் எடுத்த இறைவி படமும் பெரியளவில் ஓடவில்லை.

இந்த படத்தில் தயாரிப்பாளர்களை பற்றி தவறான விமர்சனம் வைத்ததால், இவரை வைத்து படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது முன்வருவதில்லையாம். சொந்த தயாரிப்பில் களமிறங்கலாம் என்று நினைத்தால் அதற்கும் கையில் பணமில்லாமல் போய்விட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இயக்குனர் தனிமையில் இருப்பதற்காக வெளிநாட்டுக்கு பறந்து போயிருக்கிறாராம்.

அங்கு தனிமையில் அமர்ந்து ஒரு வலுவான கதையை உருவாக்கப் போகிறாராம். இனிமேல், தாய்நாட்டுக்கு திரும்புவது என்றால் வலுவான ஒரு கதையுடன்தான் திரும்புவேன் என்ற லட்சியத்தோடு சென்றிருக்கிறாராம். இயக்குனர் திரும்புவாரா? இல்லையென்றால், அங்கேயே செட்டிலாகிவிடுவாரா? என்பது பிறகுதான் தெரியவரும்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top