வாய்ப்பு இல்லாமல் காணாமல் போன விஜய் பட நடிகர்.. அட இவருக்காகவே பல படங்கள் ஓடியதே

சினிமாவில் எப்போதும் ஒருவர் நிலைத்து நின்று விடுவதில்லை. அது மிகப்பெரிய நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். துணை நடிகர்களாக இருப்பவர்கள் சில நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நீண்ட காலம் நிலைத்திட முடியாது. சில சமயங்களில் இது மிகப் பெரிய நடிகர்களுக்கே பொருந்தும்.

கடந்த 1999 ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டுவரை ஒளிபரப்பான ராதிகாவின் சித்தி தொடரில் அறிமுகமானவர் நடிகர் பாலாஜி. அதில் அவர் நடித்த டேனியல் என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதை கொண்டு தன்னுடைய பெயரை டேனியல் பாலாஜி என மாற்றிக்கொண்டார். சீரியலில் இருந்து பின்னர் ஏப்ரல் மாதத்தில் மற்றும் தனுஷின் காதல் கொண்டேன் படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றினார்

ஆனால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின், காக்க காக்க படத்தில் நடித்திருந்தாலும் மீண்டும் அவருடன் கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார். இந்த படம் தான் அவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பின்னர் வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தில் தனுஷுடன் மீண்டும் மிரள வைத்தார்.

நல்ல வில்லனாக அறியப்பட்ட காலத்தில் சில படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார். வேட்டையாடு விளையாடு படம் கொடுத்த புகழின் மூலம் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழிலுள்ள விஜய், அஜித், தனுஷ், சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களுக்கும் வில்லனாக தோன்றி அசத்தினார்.

கடைசியாக இவர் நடிப்பில் பெரிதும் பேசப்பட்ட கதாபாத்திரம் வெற்றிமாறனின் வட சென்னையில் அமைந்து தம்பி கதாபாத்திரமே. பின்னர் விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. திடீரென அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் தற்போது காணாமல் போயுள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு. ஆனால் அது தோல்வியை தழுவியது. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை சென்றடைந்த டேனியல் பாலாஜி மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகனின் ஆசை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்