Connect with us
Cinemapettai

Cinemapettai

ipl-match

Sports | விளையாட்டு

தலைகீழாக நின்றாலும் இவர்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது.. நக்கலாக பேசியுள்ள இங்கிலாந்து வீரர்!

56 போட்டிகள் கொண்ட ஐபிஎல் லீக் சுற்று முடிந்தது. எப்படியாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் பெங்களூரு அணி ஒருவழியாக தட்டுத்தடுமாறி கடைசி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

மேலும் அவர் பெங்களூர் அணி பல போட்டிகளில் தோற்று போனாலும், மற்ற அணிகளின் கரிசனையில்தான் முன்னேறி இருக்கிறது.

‘டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பதினெட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தால் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் இடையிலான கடைசி லீக் போட்டியில் முடிவிற்காக பெங்களூர் அணி காத்திருக்க வேண்டியதாக இருந்திருக்கும்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், பெங்களூரு அணிக்கு இந்த ஆண்டு கோப்பை வெல்லும் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உலகமே எதிர்பாராத விஷயத்தைத்தான் நோக்கி இருக்கிறது, என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. 20 ஓவர் போட்டி எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம், யார் வேண்டுமானாலும் மேட்ச் வின்னர் ஆகலாம்.

நம்பிக்கை மற்றும் கடவுளின் கருணை இருந்தால் விராட் கோலியின் பேட்டிங் பெங்களூரு அணிக்கு வெற்றி பெற்று கொடுக்கலாம் என்று நக்கலாக பேசியுள்ளார் மைக்கேல் வாகன்.

RCB-ipl

RCB-ipl

Continue Reading
To Top