பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கஞ்சா கருப்புவிடம் கருத்து கெட்ட போது

“எனக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. அவர்கள் என் மீது பாசம் கொண்டவர்கள்… சும்மா ஒரு நம்பரை காட்டி இந்த நம்பர்க்கு மிஸ்டு கால் கொடுத்தா அவுங்களை காப்பாதிரலாம்னு அறிவிக்குறதுல எனக்கு நம்பிக்கை இல்லை.

எனக்கு மக்கள் ஓட்டு போடாமல் இருந்திருக்க மாட்டார்கள். இது பற்றி கமல் சார் என்னிடம் எதுவும் பேசிக்கலை, அவரு அவரோட வேலைய பார்க்குறாரு நான் என்னோட வேலைய பார்க்குறேன். இதுல கமல் சாரை குறை சொல்ல எதுவும் இல்லை.

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமா நான் குடும்ப உறவுகளின் மதிப்பை நல்லா புரிஞ்சுகிட்டேன், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டேன்.

நமிதா எனக்கு தங்கச்சி மாதிரி, கிளம்பும்போது நமீதாவை கட்டி பிடிச்சது பற்றி நண்பர்கள் எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க…” என்று நகைச்சுவையாய் சொன்னார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கஞ்சா கருப்பு வீட்ல இப்போ பழைய பாத்திரங்களை கூட ‘பரணி’ மேல வைக்கிறதில்லையாம்ங்க.