Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அறிவுரைகளை ஏற்பதும் இல்லை.. வழங்குவதும் இல்லை: கமல்

kamal-bb6-vijay-tv

என் பெற்றோர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம் போல நானும் என் மகள்களுக்கு அறிவுரை வழங்குவதில் இல்லை நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் ஸ்டார் ஐகான் கமல்ஹாசன். பலரும் ஒரே மாதிரி கதையை எடுத்துக் கொண்டு இருந்த சமயத்திலேயே தன்னால் முடிந்த புது புது டெக்னிக்குகளை அறிமுகப்படுத்தியவர் கமல். தற்போது விஸ்வரூபம் 2 படத்தினை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அப்படத்தை தொடர்ந்து பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் சபாஷ் நாயுடு, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படங்களில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு படங்களை முடித்துக் கொண்டு கமல் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிப்பதில் இருந்து விலகுவார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இதை தொடர்ந்து, தன்னுடைய கட்சி பணிகளிலும் அதே அளவிலான ஈடுபாட்டை காட்டி வரும் கமல். அடுக்கடி மாநாடுக்களை நடத்தி வருகிறார். சமூக பிரச்சனைகளில் ஒரு அரசியல்வாதியாக தனது பங்கை திறம்பட செய்து வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். முதலில் அரசியலில் நான் வருகிறேன் என அவர் அறிவித்ததும், ஆதரவு குரல்களுக்கு நடுவே எதிர்ப்பலைகளும் வலுவாக நிலவியது. அப்போ, அவர் வீட்டில் அரசியல் நுழைவு குறித்து இவர் மகள்கள் என்ன கூறினர் என அவரிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கமல், நான் அரசியலுக்கு வருகிறேன் என கூறியதும், அவர்களுக்குள் ஒரு பயம் இருந்தது. அது சாதாரணமாகவே குடும்ப உறுப்பினர்களுக்கு தோன்றும் பயம் தான். எனது ஆறுதலால் அவர்கள் தைரியம் அடைந்தனர் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, கமல் மகள்களுக்கு அறிவுரை கூறுவாரா என்ற கேள்வியும் அவர் முன் வைக்கப்பட்டது. ஸ்ருதிக்கோ, அக்‌ஷராவிற்கோ நான் எந்த அறிவுரையோ, ஆலோசனையோ இதுவரை தானாக கூற மாட்டேன். அவர்களே சில நேரத்தில் ஏற்படும் தடுமாற்றம் காரணமாக என்னிடம் வருவர். அப்போது மட்டுமே ஒரு அப்பாவாக நான் கூறுவேன். நானும் இளவயதில் யாருடைய அறிவுரையின் பேரில் நடந்து கொண்டது இல்லை. எல்லாமே என் முடிவு தான். நான் என் மகள்களுக்கு கொடுத்த சுதந்திரம் எனக்கு என் பெற்றோர்களிடம் இருந்து கிடைத்தது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top