Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

வேற லெவலில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.. நயன்தாராவின் நிழல் விமர்சனம்

மலையாள சினிமாவில் பிரபல எடிட்டர் அப்பு என் பட்டாத்திரி இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் நிழல். தமிழ் மட்டுமன்றி மலையாளத்திலும் நடிக்க ஸ்கோப் இருக்கும் படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். நடிகர் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார், 8 வயது குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்துள்ளார்.

கடந்த மாதம் 9-ந் தேதி திரை அரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இரண்டே வாரங்களில் இப்படம் நிறுத்தப்பட்டது. இப்படம் இரண்டு வாரங்களுக்கு முன் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.

கதை – மாஜிஸ்திரேட் குஞ்சாக்கோ போபன் ஒரு விபத்தில் சிக்குகிறார். பைக் ஆசாமி ஒருவனுடன் மல்லுக்கட்டுவதன் வாயிலாக ஏற்படுகிறது இந்த விபத்து. ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் இவருக்கு மூக்கு எலும்பு இணைவதற்கு ஒரு மாஸ்க் மாட்டப்படுகிறது.  இவருக்கு மட்டும் மழை பெய்வது போன்ற உணர்வு வருகிறது.

ஹீரோவின் நண்பரின் மனைவி குழந்தைகளுக்கான சைக்காலஜிஸ்ட் ஏனவே இரண்டாவது ஒபினியன் கேட்க அவரை சந்திக்கிறார். அவர் அப்பொழுது ஒரு சிறுவன் பற்றி சொல்கிறார். குழைந்தைகள் ஸ்கூலில் காக்கா, சிங்கம் என கதை சொல்ல இவன் மட்டும் குளத்தில் ஒருவனை கொலை செய்யும் கதையை சொல்கிறான். அதனை தனது நோட்டிலும் எழுதி வைக்கிறான். அப்பா கிடையாது, அம்மா நயன்தாரா மட்டுமே.

இப்படி இருக்க ஹீரோ நெருங்கி இவர்களுடன் பழக்க ஆர்மபிக்கிறான். சிறுவன் சொன்ன கதையை ஆராய, அது உண்மை என தெரியவருகிறது. ஒரு புறம் போலீசின் எதிர்ப்பை சம்பாதிக்கிறான், மறுபுறம் சிறுவனின் அடுத்த கதையை பற்றி விசாரிக்க, அதுவும் உண்மை என்பது தெரியவருகிறது.

இறந்தவரின் ஆத்மா இவனுள் இருக்குமோ என யோசிக்கும் சமயத்தில், இவை அனைத்தும் 28 வருடம் முன்பு நடக்கும் கொலைகள் என தெரியவருகிறது. சிறுவனின் அப்பா க்ரைம் ரிப்போர்ட்டர், அவர் அவனுக்கு இதை பேயாக வந்து சொல்கிறாரோ என விசாரிக்க ஹோகனேக்கல் செல்கின்றனர், அதுவும் இல்லை என்பது தெரிய வருகிறது.

nizhal

அந்த நேரத்தில் தான்  கதையை சொல்வதே நயன்தாரா என கண்டுபிடிக்கிறார் ஹீரோ. பின் அவர் விசாரிக்க அது நயன்தாரா சிறு வயதில் கேட்ட கதைகள் என்றும், அதனை தான் தன்னையும் அறியாமல் தூக்கத்தில் தனது மகனிடம் சொல்கிறார். உறக்கத்தில் சிறுவன் ஆழ்மனதில் அது பதிகிறது, அவன் அதை கதையாக சொல்கிறான்.

இறுதியில் அம்மாவுக்கு பழக்கமான லால் குடி போதையில் தான் செய்த கொலைகளை சொல்ல, அப்பொழுது மடியில் தூங்கும் நயன்தாராவுக்கு ஆழ் மனதில் இந்த கதைகள் பதிகிறது என ட்விஸ்ட் முடிச்சியை அவிழ்கின்றனர்.

இந்நிலையில் நயன்தாராவின் அம்மாவை கொன்றதும் லால் தான், அந்த கதையை சிறுவன் ஹீரோவிடம் சொல்ல, அவர் சென்று நயன்தாராவை காப்பாற்றினாரா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

சினிமாபேட்டை அலசல் – ஸ்டைலிஷ் மேக்கிங், உறுத்தல் இல்லாத பின்னணி இசை, சில இடங்களில் க்ராபிக்ஸ் என மல்ட்டிப்ளெக்ஸ் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமே இது. இவர்களின் டார்கெட்டை சரியாக நோக்கி பயணித்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர் இந்த டீம். ஹாரர் படமா, அல்லது திரில்லர் படமா என நம்மை கடைசி வரை யூகிக்க வைத்து அசத்தியுள்ளார். இறுதியில் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானர்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – படம் எந்த வித விறுவிறுப்பும் இல்லாமல் ஸ்லோவாக செல்வது ஒரு குறை தான், எனினும் வீட்டில் அமர்ந்து ஹாயாக இந்த லாக் டவுனில் பார்க்க ஏற்ற படமே.

சினிமாபேட்டை ரேட்டிங் 3/5

Continue Reading
To Top