போன வருடம் தமிழ் சினிமா பக்கம் மலையாள சினிமா காத்து வீசியதை அனைவருக்கும் தெரியும்,அதற்க்கு காரணம் ஒரே ஒரு மலையாள படம் தான்.அந்த படமானது நிவின் பாலி நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் பிரேமம்.
பிரேமம் படத்தை அஜித்தும் ஷாலினியும் பார்த்துள்ளனர் இந்த படத்தை பிடித்ததால் நிவின் பாலியை வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளனர். அப்போது ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது அந்த புகைப்படம் இப்பொழுது சமூகவளைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் இந்த நிலையில் அஜித் வீட்டில் சந்தித்ததை பற்றி நிவின் பாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்,அவர் கூறியதாவது இருவரும் பிரேமம் படம் பார்த்துள்ளனர் இந்த படம் பிடித்து போய் என்னை வீட்டிற்கு அழைத்தார்கள்,அப்பொழுது அஜித் அவர்களே பிரியாணி மற்றும் சில உணவு வகைகளை எனக்கு பரிமாறினார்,சாப்பிட்ட தட்டையும் என்னை எடுக்கவிடவில்லை அவரே எல்லாத்தையும் செய்தார்.

பின்பு அடுத்த படத்தை பற்றி கேட்டார்கள் ,மேலும் எப்படி கதை தேர்ந்தெடுப்பது என சினிமா பற்றியதை அஜித் அவர்கள் பேசினார்கள் என்று நிவின் பாலி கூறினார்.