vijay-nivin-paulyநடிகர் விஜய்க்கு கேரளாவில் இருக்கும் மவுசு நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவரது படங்கள் தமிழகத்தை போலவே அங்கேயும் சர்வ சாதாரணமாக கோடிகளை வசூல் செய்யும்.

இந்நிலையில் தற்போது இதே பாணியில் மலையாள நடிகர் நிவின் பாலி தமிழகத்தில் கோலோச்சி வருகிறார். பிரேமம் படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படத்துக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் தற்போது அவர் நடித்து வரும் ‘ஜேகோபின்டே ஸ்வர்க ராஜ்யம்’ படத்துக்கும் இங்கே நல்ல எதிர்பார்ப்பு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.