Tamil Cinema News | சினிமா செய்திகள்
5 வருடம் கழித்து மீண்டும் படம் இயக்கும் நிவின் பாலி பட இயக்குனர்.. சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தும் இந்த நிலைமையா?
மலையாள ஹீரோவாக நிவின் பாலி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நிவின் பாலி அதன் பிறகு வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம்வந்தார்.
பிரேமம் படம் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படம் நிவின் பாலிக்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
தமிழ்நாட்டில் நிவின்பாலி நடித்த நேரம் மற்றும் பிரேமம் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் தான் அல்போன்ஸ் புத்திரன்.
பிரேமம் படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆன நிலையில் இதுவரை ஒரு படம் கூட மீண்டும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.
விரைவில் இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவரும் என தெரிகிறது. பிரேமம் பட இயக்குனரின் புதிய படம் என்பதால் இப்போது இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
