Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஃபுல் போதையில் கண்ணு முண்ணு தெரியாமல் ஆட்டம் போடும் நிவேதா தாமஸ்.. போதை ஏத்தும் வீடியோ செம வைரல்
குருவி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த போராளி படத்தின் மூலம் நாயகியாக களம் இறங்கியவர் நிவேதா தாமஸ்.
பின்னர் தமிழ், மலையாளம் என கலக்கிக் கொண்டிருந்த நாயகியை தெலுங்கு பக்கம் இழுத்துச் சென்றார் பிரபல நடிகர் நானி. அந்த படம் ஹிட் அடிக்க தொடர்ந்து பல வாய்ப்புகள் குவிந்த நிலையில் தெலுங்கிலேயே தங்கி விட்டார்.
அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் நடித்த பாபநாசம் என்ற சூப்பர்ஹிட் படத்திலும், ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்திலும் மகளாக நடித்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் திடீரென நிவேதா தாமஸ் ஃபுல் போதையில் கண்ணு முன்னு தெரியாமல் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
இது பற்றி விசாரிக்கும் போதுதான் அந்த வீடியோ விரைவில் அமேசான் தளத்தில் நானி வில்லனாக நடித்து வெளியாக உள்ள அவரது 25 வது படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி என்பது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோதான் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. நிவேதா தாமஸ் வி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
