Tamil Cinema News | சினிமா செய்திகள்
நிவேதா தாமஸ்-ஐ திருமணம் செய்துகொள்ள இதுதான் கண்டிஷன்.. அப்ளிகேஷன் அனுப்புனா வாய்ப்பு இருக்கு!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ். தமிழில் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக நிவேதா தாமஸ் நடிக்கும் படங்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
கேரியரின் உச்சத்தில் இருக்கும் நிவேதா தாமஸ் அடுத்ததாக சில பல பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். வழக்கம்போல் முன்னணி நடிகையான பிறகு அடுத்தது கல்யாணம் என்ற வார்த்தையை கிளப்பி விட்டு விடுவார்கள்.
அதேமாதிரி தற்போது நிவேதா தாமஸ் இடமும் அந்த கேள்வியை கேட்டுள்ளனர். இளம் நடிகையாக இருந்தாலும் தெளிவாக அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றுகிறதோ அப்போது சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன். ஆனால் எனக்கு கணவராக வருபவருக்கு சில கண்டிஷன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதிகமாக பயணம் செய்பவராக இருக்க வேண்டும் எனவும், முகத்திற்கு நேர் பேச வேண்டும், முதுகுக்கு பின்னால் பேசுபவராக இருக்கக் கூடாது எனவும், மேலும் கணவர் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே நண்பர்களே, இந்த மாதிரி குவாலிட்டி இருந்தால் உடனடியாக இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு சினிமாபேட்டை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
