Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்கள் வெர்ஜினா என கேள்வி கேட்ட நபர்.. அசால்டாக பதில் சொன்ன நிவேதா தாமஸ்
நிவேதா தாமஸ் பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகளாக நடித்திருப்பார், தத்ரூபமான அந்த நடிப்பு இப்போது வரை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. தற்போது தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது பாணியில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் அத்துமீறி நீங்கள் வெர்ஜினா? என்ற கேள்விக்கு அவர் தன் தைரியமாக பதிலளித்துள்ளார்.
இது போன்று சமூக வலைத்தளங்களில் மட்டமான கேள்விகளை கேட்கும் ரசிகர்களுக்கு செருப்படி போன்று உள்ளது இந்த பதில். நீங்கள் சக மனுஷியுடன் பேசிக் கொண்டிருப்பதை புரிந்துகொள்ளுங்கள். மரியாதையும் மற்றும் கண்ணியத்துடன் பேசுங்கள் என்று தைரியமாக பதிவிட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் என்னுடன் ரசிகர்கள் நேரத்தை செலவிடுவதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு சினிமாவில் பெண்களின் தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது.
இதே போன்று நடிகை ராஷ்மிகா ரசிகர்களின் கேள்விகளுக்கு தைரியமாக பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

nivetha-1
