fbpx
Connect with us

Cinemapettai

இங்கேயே இவ்வளவு போட்டின்னா அக்கட தேசத்தில் சும்மா.. நிவேதா பெத்துராஜ்க்குத்தான்

nivetha-pethuraj

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இங்கேயே இவ்வளவு போட்டின்னா அக்கட தேசத்தில் சும்மா.. நிவேதா பெத்துராஜ்க்குத்தான்

துபாயில் இருந்து வந்த தமிழ் பொண்ணு நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் கோலிவுட்டில் பிரபலம் ஆனவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. இதில் பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் டிக்டாக் ஆகிய படங்களை தவிர மற்றவை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஆனாலும் அம்மணிக்கு மவுசு குறைவில்லை. பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில மட்டும் தற்போது பார்டி, ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத்தமிழன் என நான்கு தமிழ் படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்த படங்கள் எல்லாமே முக்கிய நடிகர்களின் படங்கள் ஆகும். இந்நிலையில் தமிழை தொடர்ந்து தெலுங்கும் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்பு கொடுத்துள்ளது. அல்ல வைகுண்டபுரமியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்னும் சில தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆக நிவேதாவுக்கு வாய்ப்பு இருக்காம். தமிழிலேயே பலர் போட்டி போட்டு அவரை கதாநாயகி ஆக்க முயன்று வரும் நிலையில் அவர் திடீரென தெலுங்கு பக்கம் போனது புயல் கரையை கடந்தது போல் இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top