Connect with us
Cinemapettai

Cinemapettai

nivetha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சி காட்ட நான் ரெடி, கொடுக்க நீங்க ரெடியா? தயாரிப்பாளர்களுக்கு தூதுவிட்ட நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் எப்போது தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு பக்கம் சென்ராறோ அப்போதிலிருந்து அவரது வாயில் வருவதெல்லாம் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், கமர்சியல் நாயகியாக மாறவேண்டும் என்பதுதான்.

தமிழிலும் அப்படி சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. நிவேதா பெத்துராஜ் அளவைகுண்டபுரம்லோ படத்திற்கு பிறகு தெலுங்கிலேயே செட்டிலாகிவிட்டார்.

பெரும்பாலும் நிவேதா பெத்துராஜ் தனக்கு சீரியஸான கதாபாத்திரங்கள் மட்டுமே வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நானும் எவ்வளவு நாள்தான் இப்படியே நடிக்கிறது என புலம்பும் அளவுக்கு இருக்கிறது அவரது பேட்டி.

அதே பேட்டியில் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக படங்களில் கவர்ச்சி காட்ட ரெடி என கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் நிவேதா பெத்துராஜ். அந்த பேட்டியில், எனக்கு கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டும் என ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கமர்சியல் நாயகியாக மாறினால்தான் குறும்புத்தனமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் எனவும், அதுதான் மிகவும் சுவாரசியமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட அக்கடதேச தயாரிப்பாளர்கள் தற்போது நிவேதா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு பணம் பெட்டியுடன் கிளம்ப ஆரம்பித்து விட்டனர்.

பார்ப்பதற்கே மப்பும் மந்தாரமாக இருக்கும் நிவேதா பெத்துராஜை எப்படியாவது கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டுகொண்டிருந்த தயாரிப்பாளர்கள் பலரும் இப்போது அதற்கு நேரம் கனிந்து வந்துள்ளதால் அட்வான்ஸ் கொடுக்க அதிகாலையிலேயே சென்று விடுகிறார்களாம். இனி விரைவில் தெலுங்கில் மசாலா நாயகியாக நிவேதா பெத்துராஜை பார்க்கலாம்.

nivetha-pethuraj-cinemapettai

nivetha-pethuraj-cinemapettai

Continue Reading
To Top