Connect with us
Cinemapettai

Cinemapettai

nivetha-atlee-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நிவேதா பெத்துராஜூக்கு இப்படி ஒரு திறமையா? பேசாம பிகில்-2 எடுக்கலாம் போல என யோசிக்கும் அட்லீ!

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அழகியை எப்படி தவற விட்டோம் என யோசிக்கும் அளவுக்கு ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் களம் இறங்கியவர் நிவேதா பெத்துராஜ்.

நல்ல உயரம், ஹீரோயினுக்கு ஏற்ற உடல் அமைப்பு, முக்கியமாக தமிழ் பேசத் தெரிந்த நடிகை. இதைவிட என்ன வேண்டும். முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவு கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்றாலும் இவரை பார்க்கவே பல ரசிகர்கள் தியேட்டரில் படையெடுக்க ஆரம்பித்தனர். இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பில்லை.

சரி, இருக்கிறதே இருக்கிறது என தெலுங்கு பக்கம் தாவிய நிவேதா பெத்துராஜ் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்று கொண்டார்கள் அந்த மாநில ரசிகர்கள். ரசிக்கத் தெரிந்தவர்கள் போல.

அம்மணியை பார்த்ததும் அப்படியே அனைவரும் அவுட். அதுமட்டுமில்லாமல் அல்லு அர்ஜுனுடன் நடித்த அளவைகுண்டபுரம்லோ படம் சூப்பர் ஹிட். அவ்வளவுதான் அம்மணி அங்கேயே செட்டில்.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் நிவேதா பெத்துராஜ் புட்பால் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது இது தான் இணையதளத்தில் செம வைரல்.

nivetha-pethuraj-cinemapettai

nivetha-pethuraj-cinemapettai

நிவேதா பெத்துராஜூக்கு இப்படி ஒரு திறமை இருப்பது தெரிந்திருந்தால் பிகில் படத்தில் நடிக்க வைத்திருக்கலாமே என்று அட்லீயை யோசிக்க வைக்கும் அளவுக்கு திறமையாக விளையாடி உள்ளார்.

அனேகமாக நிவேதா பெத்துராஜூக்கு பிகில்-2 படத்தில் வாய்ப்பு கொடுத்தாலும் கொடுப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top