பொதுவாக என் மனசு தங்கம் படத்தை பற்றி பேட்டியளித்த நிவேதா பெத்துராஜ் பகிர்ந்துகொண்டவை

“பொதுவாக என் மனசு தங்கம் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், இதுல நான் கிராமத்து பெண்ணாக நடித்தாலும் கிராமத்து சாயலில் எனது கதாபாத்திரம் இருக்காது…கிராமத்தில் வசிக்கும் கொஞ்சம் பணக்கார குடும்ப பெண்ணாக நான் வருவேன். அதனால் கிராமத்து வசனம் எல்லாம் பேசி இருக்கமாட்டேன்.

nivetha-pethuraj-bikiniநான் இதுக்கு முன்னாடி நடிச்ச ஒரு நாள் கூத்து படத்துல என்னோட காட்சிகள் மிகவும் குறைவு, மேலும் அந்த படத்துல எனக்கு நடனமாட வாய்ப்பு கிடைக்கலை.

ஆனால் இந்த படம் எனக்கு நடனமாட நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கு. படத்துல பிருந்தா மாஸ்டர் என்னை பொறுமையாக நடத்தினார். எனக்கு நடனம் ஆடத் தெரியாது. முதலில் தவறு தவறாக ஆடிய நான் விரைவில் கற்று நன்கு ஆடினேன்.

இதில் என்னுடன் நடிக்கும் உதயநிதி எப்படி ஆடுவார் எனப் பார்க்க எனக்கு ஆர்வமாக இருந்தது. பரவாயில்லை அவர் முன்பை விட இப்போது நன்றாகவே நடனமாடுகிறார்.

இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதுவும் படத்தின் கிளைமாக்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் 3000 பேர்கள் என்னை சுற்றி இருந்தனர். ஒரு எமொஷனான காட்சி அது. மழை வேறு பெய்வது போன்ற காட்சி. எனக்கு வசனம் பேசுவதே சிரமமாக இருந்தது.

NivethaPethuraj_KaatruVeliyidaiசூரி அவர்கள்தான் எனக்கு உதவினார். அனைவரையும் சத்தம் போடாமல் பார்த்துக்கொண்டார். அவருக்கும் எனக்கும் இந்த படத்தில் நிறைய தனிக்காட்சிகள் உண்டு, காமெடி காட்சிகளும் உண்டு. அவர் என்னை தங்கை என்றே அழைப்பார்.

படத்தில் நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரம் பார்த்திபன் அவர்கள். அவர் சந்தோஷமாக உள்ளாரா சோகமாக உள்ளாரா என்று அவர் முகத்தை பார்த்து சொல்ல முடியாது. ஆனால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பல விஷயங்கள் இருக்கும். அவர் ஒரு ஜீனியஸ்”

Nivetha-Pethuraj-Stills-11மேலும் அவர் நடித்துக் கொண்டிருக்கும் டிக் டிக் டிக் படம் பற்றி அவர் சொன்னபோது படப்பிடிப்பில் தினமும் ஒவ்வொருவருக்கும் ரத்தக்காயம் படும்படி விபத்து நடக்கும். இந்த படம் முடியும் வரை யாருக்கு என்ன ஆகும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இந்த நிவேதா பெத்துராஜை இவ்ளோ அழகா பெத்தவங்க யாருப்பா?