சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

Dangerous Fellow.. நடுரோட்ல நிவேதா பெத்துராஜை.. என்ன நிலைமைக்கு ஆளாக போகிறானோ

திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் அட்டை கத்தி தினேசுடன் ‛ஒருநாள் கூத்து’, நடிகரும் தற்போதைய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுடன் ‛பொதுவாக எம்மனசு தங்கம்’, பிரபுதேவாவுடன் ‛பொன் மாணிக்கவேல்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து கார் ரேஸ்களிலும் பங்கேற்று வருகிறார். இவருக்கும் துணை முதலமைச்சர் அவருக்கும் எதோ ஒன்று இருக்கிறது என்றெல்லாம் சில நாட்களாகவே தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த கிசுகிசுகளுக்கெல்லாம் சில மாதங்களுக்கு முன் பதிலடி கொடுத்திருந்தார்.

“இப்படியெல்லாம் பேசாதீர்கள்.. இது என் குடும்பத்தை பாதிக்கிறது” என்று வருத்தத்தோடு கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்டோரி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சிக்னலில் வைத்து வழிப்பறி..

அதில் நிவேதா பெத்துராஜ், ‛‛அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100யை எடுத்தேன்.”

இந்த வேளையில் சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். அப்படியே ரூ.500 தாங்கனு கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100யை மீண்டும் வாங்கினேன். இந்த வேளையில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்” என கூறியுள்ளார்.

மேலும், அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால் இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளனர், என்றெல்லாம் செய்தி வெளியாகிறது.

- Advertisement -

Trending News