பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். அந்தப் படத்தை அடுத்து தமிழில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தும் ஏகப்பட்ட பில்ட்அப் கொடுத்ததால் பட வாய்ப்புகள் கிடைக்காமல்போனது. தமிழில் படங்கள் இல்லாமல் போனதால் மலையாளப் படங்களில் நடித்து வந்த நிவேதா தாமஸ், பின்னர் தெலுங்குப் பக்கம் போனார்.

நிவேதா தற்போது, நானியின் நின்னு கோரி எனும் தெலுங்கு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் 'ஜெய் லவ குசா படத்தில் நிவேதா தாமஸ் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவற்றில் ஒரு கதாபாத்திரம் வில்லன் வேடமாம். இப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். இந்நிலையில்தான், இன்னொரு நாயகியாக நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார்