Tamil Cinema News | சினிமா செய்திகள்
நித்யானந்தாவின் தீவிர பெண் பக்தர் திடீர் மாயம்.. பதறிய பெற்றோர்.. பரபரப்பை கிளப்பும் வீடியோ
உலக பேமஸ் நித்யானந்தாவிற்கு பெண் பக்தர்கள் அதிகம் இருப்பது அனைவரும் அறிந்ததே. வெளிநாட்டு வாழ் பெண்கள் கூட நித்தியானந்தாவின் மீது அவ்வளவு பற்றாக உள்ளனர். என்ன வசியம் பண்ணாரோ தெரியல.
இந்நிலையில் இவரின் தீவிர பக்தரான ம நித்யானந்தா எனும் 19 வயது பெண் திடீரென கடத்தப்பட்டதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். இவர் ஆண்டாள் குறித்த வைரமுத்து பேசிய போது அவரை கடுமையாக சாடியதால் பிரபலமடைந்தார்.
தற்போது கடந்த சில நாட்களாக இவரை காணவில்லை என பெற்றோர்கள் பதறி அடித்து அருகிலுள்ள உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண்ணான ம நித்யானந்தா, திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதில் அவர் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், என்னுடைய மன அமைதிக்காக நான் விரும்பிய இடத்திற்கு செல்வதாக கூறியிருந்தார். தனது பெற்றோர்கள் தன்னை மனரீதியாக காயப்படுத்தவே இவ்வாறு புகார் அளித்துள்ளனர் என்றும் திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
இதோ வீடியோ :
