India | இந்தியா
நித்யானந்தா எங்க நாட்டில் இல்லை.. தீவும் வாங்கவில்லை.. எல்லாமே பொய்.. ஈக்வடார் அரசு அதிரடி
இந்தியாவில் நித்யானந்தா குறித்து டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அனைத்து தகவல்களும் நித்யானந்தாவால் பராமரிக்கப்படுவதாகக் கூறப்படும் கைலாசா.ஒஆர்ஜி (kailaasa.org)என்ற வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களின் அடிப்படையில் அமைந்திருப்பதாக ஈக்வடார் அரசு தெரிவித்துள்ளது.
நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பி சென்று தென் ஆப்பிரிக்க நாடான ஈக்வடாரில் ஒரு தீவை வாங்கி அங்கே கைலாயம் என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையில் தஞ்ச கோரிக்கை கேட்டு மனு அளித்தருப்பதாகவும் ஊடகங்களில் தகவல்கள் பரவின.
நித்தியானந்தாவும் அவருடைய வெப்சைட்டில் எங்கள் நாடு இந்துகளுக்கான நாடு, இந்துக்கள் யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வாழலாம் என்று அறிவித்தார். பல்வேறு பாலியல் குற்றவழக்கில் சிக்கியுள்ள நித்தியானந்தாவின் பெயரோடு ஈக்வடார் நாட்டின் பெயரை குறிப்பிட்டு கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தகவல் பரவிவந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈக்வடார் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தா எங்கள் நாட்டில் பதுங்கியிருப்பதாக கூறி எங்கள் நாட்டின் பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிட்டு வருவதாக ஈக்வடார் அரசு வேதனை தெரிவித்துள்ளது.
நித்யானந்தா குறித்து டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அனைத்து தகவல்களும் நித்யானந்தாவால் பராமரிக்கப்படுவதாகக் கூறப்படும் கைலாசா.ஒஆர்ஜி(kailaasa.org)என்ற வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
நித்தியானந்தா எங்கள் நாட்டில் எந்த தீவையும் வாங்கவில்லை. அவர் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை. அவர் ஹைதி தீவுக்கு தப்பியிருக்கலாம் என்று கூறியுள்ளது.

kailaasa-logo
