fbpx
Connect with us

Cinemapettai

தொக்கா மாட்டிய நித்யானந்தா.. துரத்திப் பிடித்த தூதரகம்

India | இந்தியா

தொக்கா மாட்டிய நித்யானந்தா.. துரத்திப் பிடித்த தூதரகம்

பின்லேடனுக்கு பிறகு உலகம் முழுவதும் அதிகம் தேடப்படும் நபர் யார் என்றால் அது நம் நித்தியானந்தா தான். தீவிரவாதிகளை விட மோசமாக காவல்துறையினரிடம் போக்குக் காட்டி வருகிறார். எப்போது மாற்றுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.

நித்தியானந்தா ஈக்குவடார் நாட்டில் தனித் தீவு வாங்கி விட்டார் என பல செய்திகள் வெளியானது. இதனால் ஈக்வடார் நாட்டு அரசே முன்வந்து நித்தியானந்தா தங்கள் நாட்டில் இல்லை எனவும், அவர் எந்த தீவையும் வாங்க வில்லை என கூறியது.

அதேபோல் சில தினங்களுக்கு முன்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. இருப்பினும் தற்போது வரை அவர் எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில்தான் தன்னுடைய பெண் பிள்ளைகளை கடத்தி விட்டார் என புகார் கொடுத்த கேஸ் கோர்ட்டுக்கு வந்தது.

மேலும் ஜனவரி 16ம் தேதிக்குள் அந்த இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோர்ட் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் தானாகவே முன்வந்து நித்தியானந்தா தங்களை கடத்தவில்லை எனவும், நாங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கிறோம் எனவும் வீடியோவை வெளியிட்டனர்.

மேலும் தங்களுடைய அப்பாவால் தங்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பேசிய வீடியோவை வைத்து தற்போது நித்தியானந்தா வெஸ்ட் இண்டீஸ், பார்படாஸ் நகரில் வசித்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது.

மேலும் இந்த தகவலை உறுதி செய்த பின்னர் கையும் களவுமாக பிடித்து வர தற்போது ஒரு தனிப்படை அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top