India | இந்தியா
பொண்ணுங்க மட்டும் இல்ல.. ஆம்பிளைங்களுக்கும் பாலியல் தொல்லை.. நித்தியுடன் ரஞ்சிதாவும் கூட்டு
நித்யானந்தா ஆசிரமத்தில் நடக்கும் மர்மங்கள் ஒவ்வொன்றும் பாலியல் தொல்லைகளை குறிவைத்தே நடந்து வருகின்றன. கேடு கெட்ட காரியங்களைச் செய்வதற்காக இவர்கள் சாமி என்ற பெயரில் கூத்தடித்து வருவது கண்டிக்கதக்கது என பொதுமக்கள் இடையே கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ஜனார்த்தனா ஷர்மா என்பவர் நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது இரு மகள்களையும் விடுவிக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பலர் பிணை கைதிகளாகவே இருந்து வருகின்றனர் என்பது சமீப காலமாக வரும் பேட்டிகளில் திட்டவட்டமாக தெரிய வருகிறது. இந்நிலையில் அவரது இளைய மகள் கூறுகையில், நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா இருவருக்கும் தெரியாமல் எதுவுமே நடக்காது என்றும், ஆண் பெண் இருபாலருக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் கூறுகையில் நிதி திரட்டுவது தான் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேலை எனவும், இதுவரை சுமார் 8 கோடி நிதியும், 700க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் எழுதி வாங்க பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என தெரியாத நிலையில் காவல்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகத்தை நாடியுள்ளது.
