Tamil Cinema News | சினிமா செய்திகள்
டேய் நானே ஒரு பொறம்போக்கு டா, எனக்கு அவமானமா.. வீடியோ போட்டு போலீசை வெறுப்பேற்றும் நித்யானந்தா
நாளுக்கு நாள் நித்யானந்தாவின் அட்ராசிட்டி அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதே சமயத்தில் அவர் மீது ஆள் கடத்தல், பணம் மோசடி என புகார்களும் அடுக்கிக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் இழுத்து மூடியது.
போலீசாருக்கு டிமிக்கி கொடுப்பதில் சினிமா வில்லன்களை மிஞ்சி விடுவார் போல. தற்போது தனித்தீவு வாங்கி செட்டில் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. தற்போது ஈகுவார் நாட்டில் உள்ள தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாகவும், அதை தனிநாடாக அறிவிக்குமாறு ஐநா சபையிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
அவ்வப்போது யூட்யூபில் தலைகாட்டி பிரசங்கம் செய்து வரும் நித்தியானந்தா, தான் இல்லை என்றாலும் தன்னுடைய ஆசிரமங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதை நிர்வகிக்கும் பொறுப்பை திருவனந்தபுரம் ருத்ர கனியான பக்தி பிரியானந்தாவை நியமித்திருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளாராம்.
மேலும் தான் ஒரு பொறம்போக்கு என்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும், மான, அவமானத்தை பற்றியெல்லாம் தான் ஒருநாளும் கவலைப்படுவதில்லை என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளாராம்.
