Tamil Cinema News | சினிமா செய்திகள்
கைலாசவிற்கு புதிதாக இலவச விமானம் அறிவித்த நித்யானந்தா.. அடேங்கப்பா என குதூகலத்தில் பக்தர்கள்!
சமீபகாலமாக நித்யானந்தா கைலாச பற்றிய தகவல்களை அடுக்கடுக்காக தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட கைலாச என்ற ஒரு தீவு, அங்கு ரிசர்வ் வங்கி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் மேலும் கைலாச நாணயம் ஒன்றையும் வெளியிட்டு அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தியாவில் நித்யானந்தாவை தேடப்பட்டு வரும் நிலையில், அவர் ஏதோ ஒரு மலைப்பகுதியில் தான் தங்கி உள்ளார் என பலரும் கூறிவந்தனர். ஆனால் எந்த ஒரு நாடும் அவர் எந்த மலைப்பகுதியில் உள்ளார் என்ற ஒரு தகவலை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் சத்சங்கம் என்ற சொற்பொழிவின் மூலம் அனைவருக்கும் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். அந்தச் சொற்பொழிவில் தான் சமீபத்தில் கைலாச வருவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுப்பதாகவும் யார் வருவதாக இருந்தாலும் உடனே விசா அப்ளை செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

nithyananda kailasa
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா வருவதற்கு மட்டும் செலவு செய்தால் போதும். அதன் பிறகு கைலாச விமானத்தின் மூலம் உங்களை அழைத்து சென்று விடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கைலாசம் தங்குவதற்கும், உணவுக்கும் இலவசம் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ஆனால் அவரது பெயரில் வெளியான பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டதாக வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்ப போவோமா போக மாட்டோமா
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
