கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப் ஹீரோவாக நடித்துவரும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

ஓகே கண்மணி புகழ் நித்யா மேனன், இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்தபோது சுதீப்பும் இவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டார்களாம்.

எனவே நித்யா மேனன் விரைவில் ஒரு படத்தை இயக்கபோவதாகவும் இப்படத்தில் சுதீப் ஹீரோவாக நடிப்பார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.