சற்றுமுன் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதல் கட்சியை சேர்ந்தவருமாகிய திரு. நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் பின்னணி விபரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு

பீகாரில் இப்போது காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதல் மற்றும் ராஸ்ட்ரிய ஜனதாதல் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

nitishkumarபீகாரில் திரு.தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர் ரயில்வே அமைச்சரும் ராஸ்ட்ரிய ஜனதாதல் கட்சியை சேர்ந்தவருமாகிய திரு. லாலு பிரசாத் யாதவ் அவர்களின் மகனாவார்.

சிறிது நாட்கள் முன் ரயில்வே நில ஓட்டல்களை குத்தகைக்குவிட்டதில் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவ்வழக்கு சி.பி.ஐ தரப்பில் ஒப்படைக்கப்பட்டது.

lalu-yadavசி.பி.ஐ விசாரணை லாலு பிரசாத் யாதவை தொடர்ந்து அவரது மகன் தேஜஸ்வியிடமும் தொடர்ந்தது.

இதனை தொடர்ந்து முதல்வர் நிதிஷ் அவர்கள் தேஜஸ்வியை பதவி விலகுமாறு கோரினார். இதனால் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகள் எழுந்தன.

தற்போது தேஜஸ்வி பதவி விலக மறுத்த காரணத்தினால் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் பாட்னாவில் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நம்ம ஊர்லதான் இந்த கதைனா பீகாரும் இப்படித்தான் இருக்கு… நல்ல வேளை பீகார்ல எந்த சமாதியும் இல்லை ராஜினாமா செய்தவுடன் தியானம் பண்றதுக்கு.