fbpx
Connect with us

வெங்கட் பிரபுவை கலாய்க்க முயன்று ஏமாற்றம் அடைந்த நிதின் சத்யா.

News | செய்திகள்

வெங்கட் பிரபுவை கலாய்க்க முயன்று ஏமாற்றம் அடைந்த நிதின் சத்யா.

சென்னை 28, சரோஜா, பிரியாணி, மங்காத்தா உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது ‘பார்ட்டி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார்.

“பிளாக் டிக்கெட் கம்பெனி” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, வெங்கட்பிரபு இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘சென்னை 28-2’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பார்ட்டி  படத்தின் படப்பிடிப்பில்  பிஸியாக இருந்தாலும் தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் ‘RK .நகர்’ என்ற படத்தை தயாரித்தும் வருகிறார்.

அரசியல் காமெடிப் படமான இதை, சரவண ராஜன் இயக்குகிறார். வைபவ் ஹீரோவாக நடிக்க, சனா அல்தாப் ஹீரோயினாக நடிக்கிறார். இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், சந்தான பாரதி, கருணாகரன், அரவிந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.

‘ஆர்.கே. நகர்’ படத்தின் டீஸர், வெளியா கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது . அந்த டீஸரின் இறுதியில், ‘நடிகன்னா உனக்கு ஓட்டுப் போட்டுடுவாங்களா? எம்.ஜி.ஆரா நீ?’ என சம்பத் பேசுவது போல் வசனம் இடம்பெற்று து. அது அந்த சமயத்தில் கமல் அரசியலுக்கு வருவதை இவர் குறிக்கிறாரா என்று ஒரு சர்ச்சையும் வந்தது.

rk nagar

வெங்கட் பிரபு எப்பொழுதும் தன் ட்விட்டர் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று தன் பாலிய வயது போட்டோ ஒன்றை அப்லோட் செய்தார்.

“என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இன்றில் இருந்து சரியாக 30 வருடங்களுக்கு முன்னாள் என் மிருதங்க அர்கேற்றத்தின் பொழுது எடுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் அன்று என்னை ஆசிர்வதித்தார். அவர் மடியில் அமரும் பாக்கியம் எனக்கு கிட்டியது. சிறந்த நிகழ்வு. இதற்கு காரணமான என் பெற்றோருக்கு என் நன்றிகள்.”

இந்த டீவீட்டை பலரும் ரீ- ட்வீட் செய்தனர், சிலர் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்தும் சொன்னார்கள்.

இந்த நேரத்தில் தான் நிதின் சத்யா சற்றே குசும்புடன் இந்த டீவீட்டை போட்டார்.

“உங்களுக்கு தான் அவரின் ஆசீர்வாதம் உள்ளதே, ஏன் நீங்கள் ஆர். கே. நகருக்கு ஏதேனும் செய்யக்கூடாது ?” ஏன்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு தன் ஸ்டைலில் பதட்டம் ஆகாமல், பதில் தந்தார் “அதான் படம் எடுக்கிறேனே ஆர் கே நகர்.”

இதே நேரத்தில் தயாரிப்பாளரான பத்ரி  கஸ்தூரி ” நீ இன்றும் மிருதங்கம் வாசிக்கிறாயா ?” என்று கேட்க அதற்கு சிரித்துக்கொண்டே “இல்லை நண்பா. ஆனால் வேண்டும் என்றால் வாசிக்கலாம்.” என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top