fbpx
Connect with us

Cinemapettai

நிர்பயா வழக்கில் தூக்கிலிருந்து தப்பிக்க திட்டம்.. சித்து வேலை காட்டும் கொலையாளிகள்

India | இந்தியா

நிர்பயா வழக்கில் தூக்கிலிருந்து தப்பிக்க திட்டம்.. சித்து வேலை காட்டும் கொலையாளிகள்

நிர்பயா 2012ல் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விஜய் சர்மா,  மகேஷ் சிங், சிங் தாக்கூர், பவன் குப்தா இவர்களுக்கு இடையே 16 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அங்கு ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது இந்த வழக்கில் இருந்து வெளிவருவதற்கான புதிய யுத்தியை கையாண்டுள்ளனர், அதாவது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் அவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால் புதுடெல்லியில் காற்று மாசுபட்டு விஷமாக உள்ளது மற்றும் தற்போது தண்ணீரும் விஷம் ஆகியுள்ளது. இதுவே எங்களுக்கு மரண தண்டனைதான் இதனால் தூக்கு  தண்டனையை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

நிர்பயா கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு குற்றவாளிகளை உடனடியாக தாமதமின்றி தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துக் கொண்டே போகிறது. ஆகையால் இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தூக்கிலிடலாம் அல்லது ஹைதராபாத்தில் நடந்ததுபோல என்கவுண்டர் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணத்தை வைத்து உண்மையான நீதியை மறைத்து விடலாம் என்று நினைக்கும் இதுபோன்ற குற்றவாளிகளை தாமதமின்றி தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

நிர்பயாவின் பெயரைக்கொண்டு சட்டமும் இயற்றப்பட உள்ளதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார், அதாவது 21 நாளில் பெண்கள் பாலியல் செய்யப்பட்டது உறுதியானால் தூக்கு உறுதி தான். இறந்து ஏழு வருடம் ஆகிவிட்டது ஆனால் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு எளிதான சூழ்நிலையை அரசே கொடுக்கக் கூடாது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top