Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீக்குளித்து இறப்பதற்கு முன் நிலானியிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட காதலன்
டிவி நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தான்நிலானியிடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொழுது போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு ஆதரவாக போலீஸ் துறையை கண்டித்து ஒரு வீடியோ வெளியிட்டார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
கணவரைப் பிரிந்து வாழும் நிலானி உதவி இயக்குநர் காந்தி அளிக்குமாறு காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். ஆனால் திருமணம் செய்வதில் தான் பிரச்சினை ஆரம்பித்தது. நிலானியின் படப்பிடிப்பிற்கு வந்த காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். இதனால் கோபமான நிலானி போலீசில் புகார் தெரிவித்தார்.
இதனால் காந்தி லலித்குமார் கே.கே.நகரில் உள்ள சாலையில், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துக் கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன் காதலன் காந்தி லலித்குமார் நிலானியுடன் ஒன்றாக இருந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
