Connect with us

Cinemapettai

நிக்கி கல்ராணிக்கு கொரானா.. எல்லாம் அந்த நடிகருடன் சுற்றியதால் வந்தது என கவலை!

nikki-galrani-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நிக்கி கல்ராணிக்கு கொரானா.. எல்லாம் அந்த நடிகருடன் சுற்றியதால் வந்தது என கவலை!

தென் இந்திய மொழியில் அனைவரும் அறியப்படும் நடிகையாக நிக்கி கல்ராணி வலம் வந்தாலும் முன்னணி நடிகையாக வளர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

வந்த வரை லாபம் என இரண்டாம் கட்ட நாயகர்களுக்கு தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் நிலையில் சமீபகாலமாக தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இதனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் நடித்து வந்த போதிலும் எங்கேயும் நிலைத்து நிற்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் நடிகை காதலில் ஈடுபட்டார்.

கோலிவுட் வட்டாரத்தில் அடுத்த காதல் ஜோடியாக நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருப்பார்கள் என சமீபகாலமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில்கூட நடிகர் ஆதி வீட்டில் நடந்த விசேஷத்தில் நிக்கி கல்ராணி ரகசியமாக கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நிக்கி கல்ராணி தனது சமூக வலைதள பக்கங்களில் தனது கொரானா தொற்று உறுதியாக இருப்பதாகவும், கடந்த ஒரு வாரமாக தனிமையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

நிக்கி கல்ராணிக்கு இப்படி வரக் காரணம் நடிகர் ஆதி வீட்டுக்கு சென்றது தான் என செய்திகளை பரப்பி விட்டுள்ளனர். இதனால் அவரது வீட்டுக்கும் சோதனை செய்ய ஆட்கள் அனுப்பியுள்ளார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top