Connect with us

Cinemapettai

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கும் முதல் தமிழ் நடிகை.. மாட்டாமல் இருக்க காதலனுடன் ஓட்டம்

actress

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கும் முதல் தமிழ் நடிகை.. மாட்டாமல் இருக்க காதலனுடன் ஓட்டம்

சினிமாவில் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான நடிகர், நடிகைகள் ஏராளம் என்றே கூறலாம். இந்த நிலையில் கர்நாடகாவில் சின்னத்திரை பிரபலங்கள் போதை பொருளுக்கு அடிமையாகி போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

இவர்கள் அளித்த புகாரின் பேரில் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் பிரபல நடிகையான ராகினி திவேதி கைது செய்தனர். இன்று மீண்டும் விசாரணை தொடங்கியதில், நிக்கி கல்ராணி தங்கையான சஞ்சனா கல்ராணியை நோட்டம் விட்டு தட்டி தூக்கியுள்ளனர்.

சஞ்சனா கல்ராணி நெருங்கிய நண்பரான ராகுலை வைத்து பொறிவைத்துப் பிடித்துள்ளனர். போலீசாரிடம் ஆதாரங்கள் சிக்கி உள்ளதாகவும் விரைவில் இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் வழக்கின் விசாரணை துரிதப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல சினிமா பிரபலங்கள் சிக்கி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பது இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்த நிக்கி கல்ராணி, துண்ட காணோம் துணிய காணோம் என்று முன்னதாகவே தனது காதலரான பிரபல நடிகர் ஆதியுடன் ஓடி விட்டாராம்.

sanjana-galrani-cinempettai

sanjana-galrani-cinempettai

இதனால் கர்நாடக சினிமா துறையில் அவப்பெயர் ஏற்பட்டது மட்டுமில்லாமல், இன்னும் சில பிரபலங்கள் சிக்குவதால் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

நிக்கி கல்ராணியை தொடர்ந்து பல தமிழ் நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் எந்தெந்த தமிழ் நடிகைகள் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top