Tamil Cinema News | சினிமா செய்திகள்
நம்ம உள்ளூர் கூல் ட்ரிங்க்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிக்கி கல்ராணி, அக்ஷரா ஹாசன். அட சூப்பர் பா..
நிக்கி கல்ராணி பெங்களுருவில் பிறந்த வளர்ந்த இவர் பாஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். மேலும் இவர் மாடலிங் துறையில் நுழைந்து பின் சினிமாவில் என்ட்ரி ஆனவர். கலகலப்பு 2 , ஹர ஹர மஹாதேவகி போன்ற படங்கள் இவரை இளசுகளின் மத்தியில் டாப் மற்றும் ஹாட் ஹீரோயின் என்று ஆக்கியது.
குளிர்பான நிறுவனமான காளிமார்க், இந்த ஆண்டு வெயிலை சமாளிக்க சம்மர் முன்னிட்டு கூல் ட்ரிங்க்ஸ், பழரசங்கள், இளநீர், மினரல் வாட்டர், என 30 வகையான புதிய பொருட்களை அண்மையில் அறிமுகம் செய்தனர் . திரைப்பட நடிகைகள் நிக்கி கல்ராணி, அக்ஷரா ஹாசன், சமையல் கலை நிபுணர் தாமு உள்ளிட்ட பிரபலங்கள் இவற்றை அறிமுகம் செய்தனர்.
After being a big fan of #Bovonto for years now I’m super happy to announce that I am now a part of the legendary #Kalimark Family as their Brand Ambassador for their new line of products… https://t.co/9j5ePqORih
— Nikki Galrani (@nikkigalrani) May 7, 2019
103 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட காளிமார்க் குழும நிறுவனங்கள், ஏற்கனவே ‘பொவண்டோ’ மற்றும் ‘விப்ரோ’ ஆகியவை நல்ல ரீச் ஆகியுள்ளது. ‘இளநீ’ என்ற பெயரில் சில இயற்கை பானங்கள் பைனாப்பிள், மா, லிச்சி ஆகிய பழரசங்களை நடிகை நிக்கி கல்ராணி அறிமுகம் செய்தார்.
@AksharaHassan and @nikkigalrani as #kalimark New #Brand #Ambassador #kollywood #Bollywood #Actress #Nikkigalrani #aksharahassan #TalksOfCinema #karthikrajphotography @karthiktraj pic.twitter.com/6NOqsULwIf
— TalksOfCinema (@TalksOfCinema) May 6, 2019
நடிகை அக்ஷ்ரா ஹாசன் “ஜிப்சி” என்ற பிராண்ட் பெயரில் 7 வெவ்வேறு விதமான சுவை மற்றும் அளவுகளில் பழரச பானங்களை அறிமுகம் செய்து வைத்தார். மா, கொய்யா, புளி போன்ற சுவைகளில் இவை வருமாம்.
